Advertisment

யோகிபாபுவுக்கு அட்வைஸ் செய்த சித்தார்த்...

சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகி பாபு, மயில்சாமி, மனோபாலா சார்லி, ஆனந்த்ராஜ், ரவிமரியா, லிவிங்ஸ்டன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் கூர்கா . 4 மங்கி ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ராஜ் ஆர்யன் இசையமைத்துள்ளார் . இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. எஸ் பி பாலசுப்பிரமணியம், சித்தார்த், கரு.பழனியப்பன், யோகி பாபு, மயில்சாமி, மனோபாலா உள்ளிட்டோரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர் .

Advertisment

sdiharth

அப்போது சித்தார்த் பேசுகையில், “ட்ரைலர் பார்த்துவிட்டு, சாம் ஆண்டனிடம் பேசினேன். ரொம்ப காமெடியாக இருக்கு என்றவுடன் படமும் அப்படித்தான் சார் இருக்கும் என்றார். ரொம்ப சந்தோஷமாக இருந்தது. என்னைப் பொறுத்தவரை யோகி பாபு ஒரு நகைச்சுவை நடிகர் மட்டுமல்ல. மிகச் சிறந்த நடிகர். அவரோடு 2 படங்கள் பண்ணியிருக்கேன். ரொம்ப எதார்த்தமான ஒரு நடிகர்.

அவருடைய லுக்கை வைத்து பலரும் காமெடி பண்ணுவதில் எனக்கு உடன்பாடு கிடையாது. அதுவும் ஒரு வகை தான் என்று ஏற்றுக் கொண்டு வெவ்வேறு வகையில் காமெடி பண்ணிக்கிட்டு இருக்கார். யோகி பாபு கொஞ்சம் தன் உடம்பைப் பார்த்துக்கொள்ள வேண்டும். வெற்றிகள் வந்தவுடன் கொஞ்சம் பொறுப்புகள் வரணும். நல்லா சாப்பிட்டு, தூங்குங்கள் அதற்காகத்தான் வேலை செய்கிறோம்.

Advertisment

வரும்காலத்தில் இன்னும் உங்களை நல்லபடியாக பார்த்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். இன்று படம் தயாரிப்பது எளிது. ஆனால், அதை வெளியிடுவது ரொம்பக் கடினமான வேலையாக இருக்கிறது” என்றார்.

sidharth yogibabu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe