/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-1_325.jpg)
கடந்த 2013 ஆம் ஆண்டு இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'கடல்' படத்தின் மூலம்சித் ஸ்ரீராம்தமிழ் சினிமாவில் பாடகராக அறிமுகமானார். இப்படத்தில் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் சித் ஸ்ரீராம் பாடிய "அடியே..." பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத்தொடர்ந்து "என்னை மாற்றும் காதலே..." , "தள்ளிப்போகாதே...", "ஹே பெண்ணே.." என இவர்பாடிய அனைத்து பாடல்களும் ஹிட்டடிக்க தென்னிந்திய திரையுலகம் முழுவதும் பிரபலமானார். சமீபத்தில் வலிமை படத்தில் இவர் பாடிய அம்மா சென்டிமென்ட்பாடல் அனைவரின் கவனத்தையும்ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பாடகர் சித்ஸ்ரீராம் இயக்குநர் மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் மூலம் திரையுலகில் சித் ஸ்ரீராம் நடிகராக அறிமுகமாகவுள்ளார். இயக்குநர்மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் கவனம் செலுத்தி வருவதால்அப்படத்தின் பணிகளை முடித்து விட்டு சித் ஸ்ரீராம் நடிக்கும் படத்தின் பணிகளை தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)