/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ErCat1BUYAARI_X.jpg)
பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில், சிபிராஜ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கபடதாரி'. இப்படம், கன்னடத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற 'காவலுதாரி' படத்தின் தமிழ் ரீமேக்காகும். இப்படத்தினை லலிதா தனஞ்செயன் தயாரித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் வெளியான இப்படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி, தைப்பூசத் தினமான ஜனவரி 28-ஆம் தேதி, படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள போஸ்டரில், 'தைப்பூசத் தினத்தை விடுமுறை தினமாக அறிவித்த தமிழக அரசிற்கு நன்றி' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)