Advertisment

கமல்ஹாசன் ஸ்டைலில் வெற்றியை கொண்டாடிய சிபிராஜ்

sibiraj gifted gold jain maayon director

Advertisment

'ரங்கா' படத்திற்குப் பிறகு சிபிராஜ் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'மாயோன்'. கிஷோர் என்பவர் இயக்கியிருக்கும் இப்படத்தில் தன்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடித்துள்ளார். 'டபுள் மீனிங் ப்ரொடக்ஷன்' சார்பாக அருண்மொழி மாணிக்கம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். ஒரு பழமையான கோவிலின் பின்னணியில் நடக்கும் வகையில் இந்த கதை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் மாயோன் படத்தின் வெற்றியைப் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அப்போது படத்தின் வெற்றிக்காக நடிகர் சிபிராஜ் இயக்குநர் கிஷோருக்கு தங்கச் சங்கிலி ஒன்றைப் பரிசளித்துள்ளார். மேலும் மாயோன் படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் வெளியான விக்ரம் படம் பெற்ற வெற்றியின் காரணமாக கமல் படத்தின் இயக்குநருக்கு கார் மற்றும் படக்குழுவினருக்கு பைக், வாட்ச் எனப் பரிசளித்திருந்தார். இதைப் போன்று நடிகர் ஆர்.ஜே பாலாஜியும் வீட்டுல விசேஷம் படத்தின் இயக்குநருக்கு தங்க செயின் பரிசளித்திருந்தார். அந்த வரிசையில் தற்போது சிபிராஜும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

vikram movie ACTOR KAMAL HASSHAN sibiraj maayon
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe