Skip to main content

மாயோனில் நடித்தபடியே ரங்காவிற்கு டப்பிங் பேசி முடித்த சிபிராஜ் 

Published on 31/12/2018 | Edited on 31/12/2018
sibi

 

நடிகர் சிபிராஜ் தற்போது தனது கேரியரின் பெருமைக்குரிய படமான 'மாயோன்' படத்தில் நடித்து வரும் அதே வேளையில், வினோத் டி.எல் இயக்கியுள்ள 'ரங்கா' படத்திற்கு டப்பிங் பேசி முடித்துவிட்டார். இந்நிலையில் இப்பட தயாரிப்பாளர் விஜய் கே செல்லையா ரங்கா படத்தை பற்றி கூறும்போது.... "இயக்குனர் சொன்ன கதையை அப்படியே திரையில் பார்க்கும்போது எந்த ஒரு தயாரிப்பாளருக்கும் உண்மையான மகிழ்ச்சியே. குறிப்பாக, ஒரு சரியான நேரத்தில் படத்தை முடித்துக் கொடுக்கும் இயக்குனர் கிடைப்பது வரம். படத்தின் இறுதி வடிவம் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது, அதை பார்க்கும்போது நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். படத்தின் இறுதி வடிவத்தை பார்க்கும்போது ஒரு பார்வையாளராக எனக்கும் ஆர்வம் இருந்தது. ஒவ்வொரு கட்டத்திலும் படத்தின் முன்னேற்றத்திற்கு மிகுந்த கவனம் செலுத்தி, கடுமையாக உழைத்த இயக்குனர் வினோத்துக்கு தான் எல்லா பாராட்டுக்களும் சாரும்.

 

 

திறமையான நடிகர்கள் என்பதை தாண்டி, தயாரிப்பாளர்களின் முதலீடுகளை மனதில் வைத்து நடிக்கும் நடிகர்களுடன் பணியாற்றுவது எப்போதும் தயாரிப்பாளர்களுக்கு நல்லது. இந்த முறையில், 'ரங்கா' படக்குழு என் நலனையும் கருத்தில் கொண்டது. குறிப்பாக, சிபிராஜ் மற்றும் நிகிலா விமல் ஆகியோர் காஷ்மீரின் கடுமையான பனிப்பொழிவு சூழலிலும், படப்பிடிப்பு குறித்த நேரத்தில் முடிவடைய தங்களால் முடிந்ததை செய்தனர்" என்றார். சிபிராஜ் உட்பட ஒட்டுமொத்த குழுவும் தங்கள் பகுதிகளை டப்பிங் செய்து முடித்துள்ளனர். ஜனவரி 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இசையை வெளியிடவும், பிப்ரவரியில் படத்தை உலகமெங்கும் வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்