Sibi Sathyaraj ranga movie trailer out now

Advertisment

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோவாக இருப்பவர் சிபிராஜ். கிஷோர் இயக்கத்தில் 'மாயோன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்திய அளவில் முதல் முறையாகப் பார்வைத்திறன் சவால் கொண்ட மாற்றுத்திறனாளிகள் படத்தை உணரும் வகையில் ஆடியோ விளக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இப்படம் ஜூன் 17-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. இதனிடையே வினோத்.டிஎல். இயக்கத்தில் நடித்திருக்கும் படம் 'ரங்கா'. 'பாஸ் மூவிஸ்' தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக நிக்கிலா விமல் நடிக்க ராம்ஜீவன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து வெளியிட்டு தயாராகவுள்ளது.

ஏற்கனவே வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஆக்ஷன் மற்றும் காதல் கலந்த படமாக உருவாகியுள்ள இப்படத்தின்ட்ரைலர்தற்போது சமூக வலைத்தளங்களில் பலரின்கவனத்தை பெற்று வருகிறது.இப்படம் வரும் 13 ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.