/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sham_1.jpg)
லேசா லேசா, இயற்கை, 12பி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர்நடிகர் ஷ்யாம். இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்துள்ள நிலையில், வில்லன், குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார்.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக ஷூட்டிங் நடைபெறாத நிலையில், தனது வீட்டிலேயே சூதாட்ட விளையாட்டில் ஈடுபட்டு போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் வசிக்கும் நடிகர் ஷ்யாம், வீட்டிலேயே சூதாட்டம் நடத்தி வருவதாக தகவல் வெளியானது. இந்த தகவலின் பேரில், அங்கு சென்ற நுங்கம்பாக்கம் போலீஸார், சூதாட்டத்தில் ஈடுபட்டதாக நடிகர் ஷாம் உட்பட 14 பேரை கைது செய்தனர். நடிகர்கள் தவிர தொழிலதிபர்கள், தனியார் நிறுவன உயர் அதிகாரிகள், உணவக உரிமையாளர்கள், புதிய இயக்குனர், வழக்கறிஞர் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சூதாட்டத்தில் லட்சக்கணக்கான ரூபாய் பணபுழக்கம் நடைபெற்றது தெரியவந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். நடிகர் ஷ்யாமை சொந்த ஜாமினில் போலீஸார் விடுவித்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)