/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/tiwari.jpg)
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த நடிகை ஸ்வேதா திவாரி 'ஷோ ஸ்டாப்பர்' என்ற இணைய தொடரில் நடித்துள்ளார். இதைவிளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், " கடவுள் என் உள்ளாடையை அளவு எடுத்துக் கொண்டிருக்கிறார்" எனக் கூறியிருந்தார். ஸ்வேதா திரியின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடுஅம்மாநில அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா இது குறித்து விசாரணை நடத்தி முழு அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் நடிகை ஸ்வேதா திவாரி தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்துஅவர் கூறுகையில்," என்னுடைய கருத்துக்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. எனது கருத்துக்கள் யாருடைய மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசப்படவில்லை. கடவுள் நம்பிக்கை மிகுந்த நான் இது போன்ற கருத்துக்களை வேண்டுமென்றே கூறுவது என்பது நடக்காத ஒன்று. எனதுசெயல்பாடுகளோ, வார்த்தைகளோ யாரையாவது புண்படுத்தியிருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" எனத்தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)