suruthi

நடிகை ஸ்ருதிஹாசன், சூர்யாவின் ஏழாம் அறிவு படத்தின்மூலமாகசினிமாவுலகில் அறிமுகமானார். தொடர்ந்து, அஜித்துடன் வேதாளம், விஜய்யுடன் புலி உள்ளிட்டபடங்களில் நடித்தார். மேலும் தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். தற்போது விஜய் சேதுபதியுடன், லாபம் படத்தில்நடித்து வருகிறார்.

Advertisment

இந்தநிலையில்ஸ்ருதிஹாசன், தனதுட்விட்டர் பக்கத்தில் ட்விட்ஒன்றைபதிவிட்டுள்ளார். அதில் அவர், "கரோனாஎன்பது,அனைவருக்குமே பெரும் ஆபத்தான ஒன்று. அந்த பெருந்தொற்று இன்னும் ஓயவில்லை. படப்பிடிப்பின்போது, கரோனாதடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படாவிட்டால் ஒரு தனி நபராகவும், ஒரு நடிகராகவும், எனது உடல்நலனுக்கு முக்கியத்துவம் தர, எனக்கு உரிமை இருக்கிறது. இதனை பொதுவாக சொல்கிறேன்" எனகூறியுள்ளார்.

Advertisment

கரோனாவால் பாதிக்கப்பட்ட திரைப்பட படப்பிடிப்புகள், அரசின் அனுமதிக்குபிறகு, தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் தொடங்கி வருகின்றன. இந்தநிலையில் ஸ்ருதிஹாசனின் இந்த ட்விட், சினிமா வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.