நடிகர் மற்றும் அரசியல்வாதியான கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் ‘ட்ரெட்ஸ்டோன்’ என்ற அமெரிக்க டிவி தொடரில் நடிப்பது உறுதியாகியுள்ளது.

Advertisment

mat damom

‘ஜேசன் போர்ன்’ என்ற கதாபாத்திரத்தை வைத்து வெளிவந்த் படங்கள் சர்வதேச அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளன. ‘போர்ன் ஐடன்டிடி’, ‘சுப்ரீமசி’, ‘அல்டிமேட்டம்’ உள்ளிட்ட ஐந்து படங்கள் இந்தக் கதாபாத்திரத்தை வைத்து வெளியாகியுள்ளன.

‘ஆபரேஷன் ட்ரெட்ஸ்டொன்’ என்ற முயற்சியை சிஐஏ அமைப்பு மேற்கொள்கிறது. இதில் பயிற்சி பெறும் ஏஜெண்டுகள் சாதாரண மனிதர்களை விட பல மடங்கு பலமும், திறனும் கொண்டவர்களாக மாறி, சிஐஏ சொல்லும் ஆட்களை திறம்படக் கொலை செய்யப் பயன்படுத்தப்படுகின்றனர். அப்படியான ஒரு ஏஜெண்ட் தான் ஜேசன் பார்ன்.

Advertisment

ஆபரேஷன் ட்ரெட்ஸ்டோன் என்பதை மையமாக வைத்து, ஜேசன் பார்ன் கதைகள் நடக்கும் உலகிலேயே நடப்பது போல ட்ரெட்ஸ்டோன் தொலைக்காட்சி தொடர் உருவாகிறது. இதன் முதல் சீசனில், சர்வதேச அளவில் ஸ்லீப்பர் ஏஜெண்டுகளாக செயல்படுபவர்களின் கதைகள் சொல்லப்படவுள்ளன.

இதில் நீரா படேல் என்ற கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹாசன் நடிக்கவுள்ளார். டெல்லியில் ஹோட்டல் பணிப்பெண்ணாக இருக்கும் ஒரு சிஐஏ ஏஜெண்ட்.

போர்ன் (Bourne) படங்களைத் தயாரித்த பென் ஸ்மித், டிம் க்ரிங் என்பவருடன் இணைந்து இந்தத் தொடரை உருவாக்கியுள்ளார்.