Advertisment

ஸ்பைடர் மேனுக்கு குரல் கொடுத்த பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்

Shubman Gill to voice Indian Spider-Man Pavitr Prabhakar

ஜோகிம் டாஸ் சாண்டோஸ், கெம்ப் பவர்ஸ், ஜஸ்டின் கே. தாம்சன் உள்ளிட்ட 3 பேர் இயக்கத்தில் அவி ஆராட், ஆமி பாஸ்கல் உள்ளிட்ட 5 பேர் தயாரிப்பில் ஷமேக் மூர், ஹெய்லி ஸ்டெய்ன்ஃபீல்ட் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஸ்பைடர் மேன் - அக்ராஸ் தி ஸ்பைடர் வெர்ஸ்'. இப்படம் வருகிற ஜூன் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் தமிழ் ட்ரைலர் கடந்த மாதம் 4 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

Advertisment

ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் இந்தியாவிலும் அதிக ரசிகர்கள் இருப்பதால் அவர்களை கவரும் வகையில் இந்தி, தமிழ், தெலுங்கு, பஞ்சாபி, குஜராத்தி, மராத்தி, பெங்காலி, கன்னடம் மற்றும் மலையாளம் என மொத்தம் 10 இந்திய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகிறது. இப்படத்தில் ஏகப்பட்ட ஸ்பைடர் மேன்கள் இருக்கும் நிலையில் இந்திய ஸ்பைடர்மேனாக 'பவித்ர பிரபாகர்' என்ற கதாபாத்திரம் இதில் அறிமுகமாகிறது.

Advertisment

இந்த நிலையில் பஞ்சாபி மற்றும் இந்தி மொழிக்கு பவித்ர பிரபாகர் கதாபாத்திரத்திற்கு பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் டப்பிங் பேசியுள்ளார். இது குறித்து சுப்மன் கில் பேசுகையில், "ஸ்பைடர் மேன் கேரக்டரை பார்த்து தான் வளர்ந்தேன். இன்று அந்த கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்துள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது" என்றார்.

shubman gill spiderman
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe