Shubman Gill Rashmika Mandanna controversy

இந்திய கிரிக்கெட் அணியில் இளம் வீரராகவும் தொடக்க ஆட்டக்காரராகவும் இருப்பவர் சுப்மன் கில். இவரைப் பற்றிய காதல் செய்தி அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வைரலாகி வருகிறது. முதலில் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கரை காதலிப்பதாகத்தகவல் வெளியானது. அதன் பிறகு பாலிவுட் நடிகை சாரா அலி கானுடன் டேட்டிங் செய்து வருவதாகக் கூறப்பட்டது.

Advertisment

இந்த நிலையில் ராஷ்மிகா மந்தனா மீது சுப்மன் கில்லுக்கு க்ரஷ் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பேசப்படுகிறது. மேலும் ஒரு பேட்டியில் இதனை சுப்மன் கில் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகின. இது தொடர்பான செய்தியைக் கண்டசுப்மன் கில், அந்த செய்தியின் கமெண்ட் செக்‌ஷனில், "இது எந்த ஊடகத்தில் பேசியது. இது தொடர்பாக எனக்கே எதுவும் தெரியாது" என விளக்கம் அளிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார்.

Advertisment

ராஷ்மிகா மந்தனா 'வாரிசு' படத்தை தொடர்ந்து தற்போது அல்லு அர்ஜுன் நடிக்கும் 'புஷ்பா 2' படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.