Skip to main content

திரும்பி வந்தார் ஸ்ருதிஹாசன்!

Published on 01/06/2018 | Edited on 02/06/2018
shrutihassan


நீண்டநாட்களாக ஓய்வில் இருந்த ஸ்ருதிஹாசன் கேங்ஸ்டரை மையமாக வைத்து உருவாகும் புதிய படத்தில் கேங்ஸ்டராக நடிக்கிறார். புகழ் பெற்ற இயக்குனர் மகேஷ்பாபு மஞ்ரேக்கர் இயக்கும் இப்படத்தில் வித்யுத் ஜமால் நாயகனாக நடிக்கிறார். பீரியட் படமாக உருவாகும் இப்படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதன் இரண்டாம்  கட்ட படப்பிடிப்பு கோவாவில் விரைவில் தொடங்க உள்ளது. அதில் ஸ்ருதிஹாசன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படவுள்ளன.
 

 

 

 


பொதுவாக இயக்குனர் மகேஷ்பாபு மஞ்ரேக்கரின் படத்தில் நடிக்கும் அனைவருக்கும் சமமான வாய்ப்புகளும் அவர்களின் தனித்தன்மையை வெளிப்படுத்தும் விதமாக கதாபாத்திரங்கள்  அமைந்திருக்கும். இதனால் ரசிகர்கள் மத்தியில் படத்துக்கு கூடுதல் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. மேலும் ஸ்ருதிஹாசன் கதாபாத்திரம் குறித்து இயக்குனர் மகேஷ்பாபு மஞ்ரேக்கர் பேசுகையில்.... "ஸ்ருதிஹாசன் கதாபாத்திரம் மற்ற கதாபாத்திரங்களின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்" என்றார். மேலும் இப்படத்தின் படபிடிப்பை முடித்தக் கையோடு தனது தந்தை கமல்ஹாசன் இயக்கும் 'சபாஷ் நாயுடு' படத்தில் நடிக்கவிருக்கிறார் ஸ்ருதிஹாசன். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"இது உங்களுக்கு தேவையில்லாத விஷயம்" - ரசிகரிடம் கடுப்பான ஸ்ருதிஹாசன்

Published on 06/04/2022 | Edited on 06/04/2022

 

actress shruti haasan replies her fan about plastic surgery

 

தமிழ், தெலுங்கு, கன்னடம் இந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் சுருதிஹாசன் தற்போது பிரபாஸ் நடிக்கும் 'சலார்'  படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தை கே.ஜி.எஃப் பட இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்குகிறார். இதனிடையே பல படங்களில் பிஸியாக நடித்து வரும் ஸ்ருதிஹாசன் அவ்வப்போது சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுடன் உரையாடுவது வழக்கம். 

 

அந்த வகையில் நடிகை ஸ்ருதிஹாசன் அண்மையில் தனது சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடி வந்தார். அப்போது ரசிகர் ஒருவர், "நீங்கள் இதுவரை எத்தனை முறை பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருக்கிறீகள் என்று கேள்வி எழுப்பிருந்தார். இதை கேட்டு கடுப்பான ஸ்ருதிஹாசன்,"நான் எத்தனை முறை பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருந்தால் உங்களுக்கு என்ன? அது உங்களுக்கு தேவையில்லாத விஷயம். அதை பற்றி கேட்க வேண்டிய அவசியமும் உங்களுக்கு இல்லை. இருந்தாலும் சொல்கிறேன் எனது  மூக்கு பகுதியில் மட்டும் தான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.

 

 

Next Story

ஹாலிவுட் படத்திற்காக தன் குரலையே அர்ப்பணித்த ஸ்ருதிஹாசன்..! 

Published on 08/11/2019 | Edited on 08/11/2019

2013ஆம் ஆண்டு வெளியான 'ஃப்ரோசன்' திரைப்படம் உலக அளவில் அனிமேஷன் படங்களிலேயே மிக அதிக வசூல் சாதனை புரிந்து சாதனை படைத்தது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகமான டிஸ்னினியின் 'ஃப்ரோசன் 2' திரைப்படம் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வரும் நவம்பர் 22ஆம் தேதி திரைக்கு வருகிறது. மேலும் '.ஃப்ரோசன் 2' படத்தின் இந்திப் பதிப்புக்காக பிரியங்கா சோப்ரா மற்றும் ப்ரனிதி சோப்ரா குரல் கொடுக்க, தெலுங்கு பதிப்புக்காக நித்யா மேனன் குரல் கொடுத்திருக்கிறார்.

 

shruti

 

இதைத்தொடர்ந்து இப்படத்தின் தமிழ் பதிப்பில் வரும் எல்சாவிற்கு ஸ்ருதிஹாசன் குரல் கொடுத்துள்ளார். அது மட்டுமின்றி இப்படத்தில் ஸ்ருதி ஹாசன் மூன்று பாடல்களையும் பாடியிருக்கிறார். அதில் 'இன் டு தி அன்னோன்' என்ற ஒரு பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் இப்படம் குறித்து ஸ்ருதிஹாசன் பேசியபோது...

 

aX

 

''ஃப்ரோசன்' திரைப்படத்தில் எல்சா மற்றும் அன்னா சகோதரிகளுக்கிடையிலான பந்தம் உள்ளத்தை உருக்கும் வகையிலானது. எல்சா தன் இளைய சகோதரி அன்னா மீது கொண்ட பேரன்பை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. காரணம் நானும் என் இளைய சகோதரி மீது அந்த அளவுக்கு பாசம் கொணடிருக்கிறேன். ஒவ்வொரு பெண்னின் ரோல் மாடல் எல்சா என்பதும், நான் அந்தப் பாத்திரத்துக்கு குரல் கொடுத்து பாடியிருப்பதும் என்னால் மறக்க முடியாத அனுபவம். பரபரப்பான இந்த அனிமேஷன் திரைப்படத்தில் பாடல்கள், படத்துக்கு மேலும் வலு சேர்ப்பதாக அமைவதுடன் எனது தமிழ்ப்பட ரசிகர்களையும் வெகுவாகக் கவரும்" என்றார்.