Advertisment

சமூக பிரச்சனைகளை விவாதிக்கத் தயாராகும் ஸ்ருதிஹாசன்

Shrutihaasan met her fans social media live

தென்னிந்திய திரைத்துறையின் முன்னணி நடிகையும், பாடகியுமான ஸ்ருதி ஹாசன் தனது பிறந்தநாளை வரும் ஜனவரி 28ஆம் தேதி கொண்டாடவுள்ளார், இதனையொட்டி நடிகை ஸ்ருதிஹாசன், சமூகம் மற்றும் சுற்றுப்புறம் தொடர்பான பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வகையில் ரசிகர்களோடு உரையாட முடிவு செய்துள்ளார். இதனைத்தொடர்ந்துமனநலம், திரைப்படம் மற்றும் ஊடகங்களில் பெண்கள்,ஃபேஷன் துறையின் நிலைத்தன்மை போன்ற தலைப்புகளில்சமூக வலைதளப்பக்கத்தில் ஜனவரி 27 முதல் தொடர்ச்சியான நேரலை நிகழ்வுகளை அவர் நடத்தவுள்ளார். மேலும் இந்த நேரலையில்நடிகை ஸ்ருதிஹாசன் பல்வேறு செல்வாக்கு மிக்க பிரபலங்கள் மற்றும் தொகுப்பாளர்களுடன் இணைந்து பொதுவாக சமூகத்தில் விவாதிக்க மறுக்கப்படும் பல தலைப்புகளில் விவாதிக்க உள்ளார்.

Advertisment

இது குறித்துநடிகை ஸ்ருதிஹாசன் கூறுகையில்," இந்த நேரலை நடத்துவதன் முக்கிய நோக்கமே இந்த தலைப்புகளைப் பற்றி சமூகத்தில் ஒரு விவாதத்தை, உரையாடலை துவக்கவேண்டும் என்பதே ஆகும். ஒருவரின் பிறந்த நாளை கொண்டாடப் பல வழிகள் உள்ளன. ஆனால் என்னைப் பொறுத்தவரை கொண்டாட்டம் என்பது,நான் அக்கறை கொண்ட விஷயங்களைப் பற்றி நேர்மையான விவாதங்களைத் சமூகத்தில் ஏற்படுத்துவதே ஆகும். இதுகுறித்து இன்னும் சமூகத்தில் அதிகம் பேசப்படவேண்டும் என்று நான் நினைக்கிறேன். இந்தத் தலைப்புகளில் நிகழும் உரையாடல்களில் நிறைய நபர்களை இணைத்து, நேரலையின் போது பலரிடமிருந்து மாறுபட்ட கண்ணோட்டங்களைப் பெறுவதும், இந்தச் சிக்கல்கள்குறித்து அவர்களைச் சிந்திக்கவும், பகிரவும், விவாதிக்கவும் வைக்க வேண்டும் என்பதே எனது நோக்கம்" எனக் கூறியுள்ளார்.

Advertisment

shrutihaasan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe