Advertisment

லண்டன் மக்களை கவர்ந்த ஸ்ருதிஹாசன் !

shruti

Advertisment

தன்னுடைய 6 வயதில் தொடங்கிய இசை பயணத்தின் மீது மீண்டும் கவனத்தை திருப்பியுள்ளார் நடிகை, இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட ஸ்ருதி ஹாசன். இதுவரை 100 க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளில் மக்களை கவர்ந்த இவர், தன் வாழ்நாள் கனவான லண்டனில் இருக்கும் டரவ்படூர் (Troubadour) எனும் இசைக்கட்சேரி இடத்தலும் சமிபத்தில் பாடினார். இந்த வருடம் வெளிவரயிருக்கும் அவரது சில சிங்கில் டிராக் பாடல்களை அவர் இந்நிகழ்ச்சியில் பாடினார்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

உலகின் மிக சிறந்த இசையமைப்பாளர்களில் சிலராக கருதப்படும் பாப் டைலான், எல்டான் ஜான், அட்லே, எட்ஸீரன் போன்றார் ('The Troubadour') எனும் இடத்தில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பகழ்பெற்ற அரங்கு1954-ல் ஒரு Coffee House-ஆக தொடங்கப்பட்டது. தி நெட் (The Ned) என்ற பெயரில் லண்டனில் உள்ள இடத்தில் கடந்த வருடம் செப்டம்பரில் நடந்த ஸ்ருதி ஹாசனின் இசை நிகழ்ச்சி சிறப்பான விமர்சனங்களை பெற்றது. மேலும் நியூ யார்கில் உள்ள மேடிஷன் அவென்யூவில் ஆகஸ்ட் 15ஆம் தேதி 2018ஆம் ஆண்டு நடந்த (The Indian Day Parade) எனும் உலகின் மிகப்பெரிய சுதந்திர தின கூட்டத்தில் இவர் முழங்கிய வந்தே மாதரம் என்ற முழக்கம் அனைவரின் பாராட்டைப்பெற்றது. மேலும் இந்த நிகழ்வு அந்நாட்டு பத்திரிக்கைகளில் தலைப்பு செய்தியாகவும் இடம் பெற்றது. சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி இருக்கும் இவரது இசை நிகழ்ச்சி வீடியோக்களை ரசிகர்கள் கண்டுகளித்து வருகிக்கின்றனர்.

shrutihaasan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe