Advertisment

தந்தை சொன்ன மந்திரத்தை கடைபிடிக்கும் ஸ்ருதிஹாசன்!

shruti

Advertisment

சமீபகாலமாகவே சினிமாவில் இருந்து ஒதுங்கி வருகிறார் நடிகை ஸ்ருதிஹாசன். மேலும் முழு நேரமும் சினிமாவிலேயே இருக்க முடியாது. இசை, சொந்த வாழ்க்கை என்று எனக்கு இன்னொரு உலகமும் இருக்கிறது என்று கூறி வரும் இவருக்கும் லண்டன் நடிகர் மைக்கேலுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக ஒருபுறம் தகவல் வெளியாகி கொண்டிருக்கிறது. அவ்வப்போது இவர்கள் இருவரும் ஜோடியாக சுற்றும் படங்கள்இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் தன் வாழ்க்கை பற்றியும் அப்பா கமலை பற்றியும் மனம் திறந்து பேசுகையில்,"தினமும் படுக்கைக்கு செல்லும்போது அன்று நடந்த விஷயங்களை சிந்தித்து பார்க்க வேண்டும் என்று எனது தந்தை கூறியிருக்கிறார். யாரையெல்லாம் சந்தித்தோம்...அவர்களிடம் எப்படி பழகினோம்...ஏதேனும் தவறு செய்தோமா...யார் மனதையாவது நோகடித்தோமா..என்ன நல்ல விஷயங்கள் செய்தோம்என்பதையெல்லாம் ஞாபகத்துக்கு கொண்டுவர வேண்டும்.அப்படி செய்வதன் மூலம் நன்றாக தூக்கம் வரும். ஏதேனும் தவறு செய்து இருந்தால் வாழ்க்கையில் மீண்டும் அதை செய்ய மாட்டோம்என்றெல்லாம் அவர் அறிவுரை கூறியிருக்கிறார். அதை தூங்கப் போகும்போது பின்பற்றுகிறேன். இதனால் எனக்கு நன்றாக தூக்கம் வருகிறது. வாழ்க்கையும் செம்மையாக மாறி இருக்கிறது. ரசிகர்களும் இதை செய்து பார்க்கலாம்" என்றார்.

shrutihaasan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe