இரண்டு வருட இடைவெளிக்கு பின்னர் தற்போது விஜய் சேதுபதியுடன் ‘லாபம்’, ரவிதேஜாவுடன் ‘க்ராக்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். அதுமட்டுமல்லாமல் பல ஹீரோயின்கள் சேர்ந்து நடிக்கும் ஒரு ஹிந்தி குறும்படத்திலும் நடிக்கிறார்.

Advertisment

shruthi hassan

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இதனிடையே ஸ்ருதி ஹாசன் தனது மூக்கை பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டு அழகுப்படுத்தினார். இதனை தொடர்ந்து அவ்வப்போது அவர் சமூக வலைதளங்களில் பதிவிடும் புகைப்படங்களில் நீங்க குண்டாகிட்டீங்க, ஒல்லியாகிட்டீங்க என மாறி மாறி கிண்டலும், விமர்சனமும் செய்திருக்கின்றனர். அப்படி தன்னுடைய தோற்றத்தை கிண்டலடித்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்ஸ்டாவில் பெரிய பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், “ஆகவே... என்னுடைய முந்தைய பதிவை தொடர்ந்து தற்போது இந்த பதிவை பதிவிட முடிவெடுத்தேன். ஏன் என்று கூறுகிறேன். என்னைப் பற்றி பிறர் கூறும் கருத்துகள் மூலம் என் வாழ்க்கையை நான் நடத்துபவரல்ல. ஆனால், தொடர்ந்து அவள் குண்டாக இருக்கிறாள், ஒல்லியாக இருக்கிறாள் என்ற கருத்துகள் தவிர்க்கப்பட வேண்டியவை.

Advertisment

இந்த 2 படங்களும் 3 நாட்களுக்கு முன்பாக எடுக்கப்பட்டது. நான் என்ன கூறப்போகிறேன் என்பதுடன் தொடர்புபடுத்திக் கொள்ளக் கூடிய பெண்கள் இருக்கிறார்கள். நான் நீண்டகாலமாகவே மனதளவிலும், உடலளவிலும் என்னுடைய கருணைமிக்க ஹார்மோன்களுடன் நல்ல உறவினை மேற்கொள்ள முயற்சி செய்கிறேன். அது சுலபமானதல்ல. வலி சுலபமல்ல, உடல் மாற்றங்கள் சுலபமல்ல, ஆனால் என் பயணத்தைப் பகிர்ந்து கொள்வது எளிது.

யாராக இருந்தாலும் அவர் புகழ்பெற்றவராக இருந்தாலும் இல்லையென்றாலும் இன்னொருவர் பற்றித் தீர்ப்பளிக்கும் நிலையில் இல்லை என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். இதுதான் என் வாழ்க்கை. இதுதான் என் முகம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன்.

ஆம்! நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டேன். இதனை ஒப்புக்கொள்வதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை. நான் இதனை விளம்பரப்படுத்துகிறேனா? இல்லை, நான் அதற்கு எதிரானவரா இல்லை. இப்படிப்பட்ட வாழ்வதைத்தான் நான் தேர்ந்தெடுத்துள்ளேன். நமக்கு நாமே செய்துகொள்ளக் கூடிய சாதகம் என்னவெனில் நம் உடல், மனம் ஆகியவற்றின் இயக்கத்தையும் மாற்றங்களையும் ஏற்றுக்கொள்ள கற்றுக் கொள்வதே, அன்பைப் பரப்புங்கள். நான் ஒவ்வொரு நாளும் என்னை நேசிக்க கற்றுக்கொண்டு வருகிறேன், என்னைப் பொறுத்தவரை கூடுதல் நேசம் தேவைப்படுவதன் காரணம் என் வாழ்க்கையின் மிகப்பெரிய காதல் கதை என்னிடம் இருக்கிறது. இது உங்களுக்குமானது என்று நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.