Advertisment

ஹாலிவுட் படம்; ஸ்ருதிஹாசன் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

shruti hassan hollywood movie update

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். அந்த வகையில் இப்போது ரஜினி - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் கூலி படத்தில் நடித்து வருகிறார். மேலும் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ட்ரெயின்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Advertisment

இப்படங்களைத் தவிர்த்து 'தி ஐ' (The Eye) என்ற ஹாலிவுட் படத்தை கைவசம் வைத்துள்ளார். டாப்னே ஷ்மோன் என்ற பெண் இயக்குநர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் மார்க் ரௌலி கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். மேலும் லிண்டா மார்லோவ், பெரு கவாலியேரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். டேவிட் ஸ்விட்சர் இசையமைத்திருக்கிறார்.

Advertisment

இந்த திரைப்படத்தில் ஸ்ருதிஹாசன் டயானா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவருடைய பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் இயக்குநரான டாட்னே ஷ்மோன் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் ஸ்ருதிஹாசனின் கதாபாத்திர தோற்றத்தை வெளியிட்டு, 'அற்புதமான மற்றும் துணிச்சல் மிக்க ஸ்ருதிஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் எப்போதும் எங்களின் 'டயானா'வாக இருப்பார். லண்டன், கிரீஸ், அமெரிக்கா மற்றும் இந்தியாவை சார்ந்த 'தி ஐ' படக் குழுவினர் இந்த பிரத்யேக நாளில் உங்களை போற்றுகிறோம். கொண்டாடுகிறோம்@ ஸ்ருதிஹாசன் '' என பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் ஸ்ருதிஹாசன்- கவலையுடன் தோன்றுகிறார். சைக்காலஜிக்கல் திரில்லர் ஜானரிலான இந்த திரைப்படம் கிரேக்க நாட்டில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவிலும் மற்றும் லண்டனில் நடைபெற்ற சுயாதீன படைப்புகளுக்கான திரைப்பட விழாவிலும் கலந்து கொண்டு பலரது கவனத்தை பெற்றது.

hollywood shruthi hassan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe