"முருகனுக்கு என் இதயத்தில் தனி இடம் உண்டு" - வேலை பச்சைகுத்திய ஸ்ருதிஹாசன்

Shruti Haasan Tattooed murugan vel

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். அந்த வகையில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் 'சலார்' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் 'தி ஐ' (The Eye) என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார்.

ஸ்ருதி ஹாசன், தனது பெயரைத்தமிழில் தனது முதுகு பகுதியில் டாட்டூவாக போட்டிருந்தார். கடந்த வாரம் அந்த டாட்டூவை மீண்டும் மை பூசினார். அப்போது புதிதாக முருக வேல் டாட்டூவை தனது பெயரில் இணைத்துக் கொண்டார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக தற்போது அதற்கு விளக்கமளித்துள்ளார்.

அவர் கூறுகையில், "எப்போதுமே நான் கடவுள் நம்பிக்கை உள்ள நபர் தான். முருகனுக்கு என் இதயத்தில் தனி இடம் உண்டு. அதை வெளிக்காட்டவே இந்த டாட்டூவை குத்தியுள்ளேன். எனது காதலன் சாந்தனு இதை வடிவமைத்தார். எனது 19வது வயதில் என் பெயரை பச்சைகுத்தினேன். இப்போது முருகன் வேலை இணைத்துள்ளதால் பாதுகாப்புடனும், அடக்கத்துடனும் இருப்பேன் என நம்புகிறேன்" என்றார்.

shruthi hassan
இதையும் படியுங்கள்
Subscribe