Shruti Haasan report flight delay

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் கவனம் செலுத்தி வரும் ஸ்ருதி ஹாசன், கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியான பிரபாஸின் சலார் படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை அடுத்து, 'தி ஐ' (The Eye), ஹாலிவுட் படத்தை கைவசம் வைத்துள்ளார். இப்போது ரஜினி - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் கூலி படத்தில் நடித்து வருகிறார்.

Advertisment

இந்த நிலையில் ஸ்ருதி ஹாசன், விமான நிலையத்தில் தவிப்பதாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “நான் சாதாரணமாக குறை கூறும் நபர் அல்ல. ஆனால் இன்டிகோ நிறுவனத்தினர், குழப்பத்தில் அவர்களை அவர்களே விஞ்சிவிட்டார்கள். கடந்த நான்கு மணிநேரமாக எந்த தகவலும் இல்லாமல் நாங்கள் விமான நிலையத்தில் சிக்கித் தவிக்கிறோம். தயவுசெய்து உங்கள் பயணிகளுக்கு ஒரு சிறந்த வழியைக் கண்டுபிடிக்க முடியுமா?” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

இதையடுத்து இன்டிகோ நிறுவனம் சார்பில் அவருக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. அந்த பதிவில், “விமானம் தாமதமானதால் ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம். நீண்ட நேரம் காத்திருப்பது எவ்வளவு சிரமமாக இருக்கும் என்பதை நாங்கள் முழுமையாக புரிந்துகொள்கிறோம். மும்பையில் நிலவும் வானிலை காரணமாக விமானங்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த காரணிகள் எங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவை என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறோம். எங்கள் விமான நிலையக் குழு வாடிக்கையாளர்களுக்கு உதவவும் அவர்களின் வசதியை உறுதிப்படுத்தவும் தங்களால் இயன்றதைச் செய்கிறது என்பதை நாங்கள் உங்களுக்கு உறுதியளிக்கிறோம்” என குறிப்பிட்டுள்ளனர்.

Advertisment