Advertisment

பேக் டூ மியூசிக் - கமலுடன் கைகோர்த்த ஸ்ருதிஹாசன்

shruti haasan  joins hands with kamal for a new musical project

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். அந்த வகையில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் 'சலார்' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வருகிற 28 ஆம் தேதி ரிலீஸாகயிருந்த நிலையில் தற்போது அது தள்ளிப் போகவுள்ளதாகப் படக்குழு சமீபத்தில் அறிவித்தது. இதைத் தவிர்த்து 'தி ஐ' (The Eye) என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார்.

Advertisment

நடிப்பதற்கு முன்பு பாடகராக பல பாடல்களைப்பாடியுள்ளார். மேலும் இசையமைப்பாளராக கமல் நடித்த உன்னைப்போல் ஒருவன் படத்தில் பணியாற்றியிருந்தார். அதன் பிறகு எந்த படத்திலும் இசையமைப்பாளராக பணியாற்றாத நிலையில் தற்போது மீண்டும் அதன் பக்கம் திரும்பியுள்ளார்.

Advertisment

கமலுடன் இணைந்து இசை ஆல்பம் ஒன்றில் பணியாற்றவுள்ளார். இதனை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளிவரவுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் பணியாற்றவுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

ACTOR KAMAL HASSHAN shruthi hassan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe