Shruti Haasan in Hollywood!

உலக நாயகன் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன்தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த வகையில்கே.ஜி.எஃப். படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகும் 'சலார்' என்ற படத்தில் பிரபல நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அதேபோல்தெலுங்கு திரைப்பட நடிகர்கள் பாலகிருஷ்ணா, சிரஞ்சீவி ஆகியோர் படங்களிலும் நடிக்கவுள்ள அவர், இந்தி படங்களிலும் நடிக்கவுள்ளார்.

Advertisment

இந்த நிலையில்ஸ்ருதிஹாசன்,தான் கிரீஸ் நாட்டில் இருப்பதாகவும்'தி ஐ' (The Eye) என்ற ஹாலிவுட் படத்தில் நடித்து வருவதாகவும் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இது சைக்கலாஜிக்கல் திகில் படமாக உருவாகிறது. இந்த படத்தை டாப்னே ஷ்மோன் இயக்குகிறார். இதில் தி லாஸ்ட் கிங்டம் படத்தில் நடித்து பிரபலமான மார்க் ரோலி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

இந்த படத்திற்கான படப்பிடிப்பு கிரீஸ் நாட்டின் (Greece) ஏதென்ஸ் (Athens) மற்றும் கோர்ஃபுவில் (Corfu) நடைபெறவுள்ளது. 1980- ஆம் ஆண்டு காலகட்டத்தில் நடக்கும் சம்பவங்களைக் கொண்ட கதையம்சத்தின் அடிப்படையில்இப்படம் தயாராகிறது.

ஹாலிவுட் படத்தில் நடித்து வரும் ஸ்ருதிஹாசனுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் சமூக வலைதளபக்கங்கள் மூலம் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.