Advertisment

‘கே.ஜி.எஃப்.’ இயக்குநரின் படத்தில் நாயகியான சுருதிஹாசன்!

Shruti Haasan

கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான ‘கே.ஜி.எஃப் சேப்டர் 1’ படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்தவர், இயக்குநர் பிரசாந்த் நீல். அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ‘கே.ஜி.எஃப்’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தனது அடுத்தப் படமான 'சலார்' படத்தின் பணிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்இயக்குநர் பிரசாந்த் நீல்.

Advertisment

alt="kalathil santhipom" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="921d5551-0fb5-4494-acdb-f2d0d4522752" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/kalathil-santhipom-500x300-article-inside_0.jpg" />

Advertisment

நடிகர் பிரபாஸ் நாயகனாக நடிக்க உள்ள இப்படத்தின் பூஜை கடந்த 15-ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இப்படமானது, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் தயாராகவுள்ளது. இந்த நிலையில், பிரபாஸிற்கு ஜோடியாக நடிகை சுருதிஹாசன் நடிக்க உள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. நடிகை சுருதிஹாசன் இன்று (28.01.2021) தனது 35-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு, இவ்வறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

shruthi hassan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe