Advertisment

பயோ பிக்கில் ஸ்ருதிஹாசன்

shruthi hassan in velu nachiyar biopic

Advertisment

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் கவனம் செலுத்தி வரும் ஸ்ருதிஹாசன், கடந்த மாதம் வெளியான பிராபாஸின் சலார் படத்தில் நடித்திருந்தார். இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் உலகளவில் ரூ.600 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை அடுத்து, 'தி ஐ' (The Eye), ஹாலிவுட் படத்தை கைவசம் வைத்துள்ளார். டாப்னே ஷ்மோன் என்ற பெண் இயக்குநர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் மார்க் ரவுலி கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். இதைத்தவிர்த்து பிலிப் ஜான் இயக்கும் ‘சென்னை ஸ்டோரி’ என்ற ஹாலிவுட் படத்திலும் சமீபத்தில் கமிட்டாகியுள்ளார். இதில் முதலில் சமந்தா நடிக்கவிருந்து பின்பு விலகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தெலுங்கில்அதிவி சேஷ் நடிக்கும் டகோயிட் (Dacoit) படத்தில் நடிக்கிறார். ஷேன்யில் டியோ இயக்கும் இப்படத்தை சுப்ரியா யர்லகடா தயாரிக்க பீம்ஸ் சிசிரோலியோ இசையமைக்கிறார். தெலுங்கு மற்றும் இந்தியில் ஒரே நேரத்தில் இப்படம் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வேலு நாச்சியார் கதாபாத்திரத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட முதல் பெண்ணாக விளங்கும் வேலு நாச்சியார் வாழ்க்கை வரலாறு, திரைப்படமாக உருவாகுவதாகவும் தூங்கா வனம், கடாரம் கொண்டான் உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜேஷ் எம்செல்வா இப்படத்தை இயக்கவுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

shruthi hassan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe