Advertisment

யூ-ட்யூப் சேனலை தொடங்கிய பிரபல நடிகை! 

shruthi hassan

கரோனா அச்சுறுத்தலால் சினிமா ஷூட்டிங் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் எப்போது ஷூட்டிங் தொடங்கப்படும் என்பது தெரியவில்லை.

Advertisment

இதனால் வீட்டிலேயே இருக்கும் சினிமா பிரபலங்கள், தனது ரசிகர்களிடம் சமூக ஊடகங்கள் வாயிலாக கலந்துரையாடி வருகின்றனர். நடிகை ஸ்ருதிஹாசன் தனது ரசிகர்களுடன் அவ்வப்போது கலந்துரையாடுவார். சில சமயங்களில் தான் பாடிய வீடியோக்களையும் ஸ்ருதி பதிவேற்றி வந்தார்.

Advertisment

இந்நிலையில் தனி யூ-ட்யூப் சேனல் ஒன்றைத் தொடங்கியுள்ளார். தனது இசை சுற்றுப் பயணத்திலிருந்து இதுவரை யாரும் பார்த்திராத காணொளிகளையும், தான் மெட்டமைத்திருக்கும் பாடல்களின் முன்னோட்டங்களையும் தனது யூடியூப் சேனல் வழியாக வெளியிட உள்ளார்.

இதுகுறித்து ஸ்ருதி ஹாசன் கூறுகையில், “சமூக ஊடகத்தில் ரசிகர்களுடன் உரையாடியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. தொடர்ந்து இயங்க ஒரு யூடியூப் சேனல்தான் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

எனது அசல் படைப்புகள், எனது இசை நிகழ்ச்சிகளின் காணொளிகள், இசை நிகழ்ச்சிகளுக்குப் பின்னால் நடந்த ஏற்பாடுகள் குறித்த காணொளிகள் என அனைத்தும் என் யூடியூப் சேனலில் இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

shruthi hassan Youtube
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe