Advertisment

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடிய ஸ்ருதிஹாசன்

shruthi hassan sings in ar rahman music

ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக சைரன்படம் வெளியானது. இப்படம் கலவையான விமர்சனமே பெற்றது. இதையடுத்து ஜெயம் ரவி,ராஜேஷ் இயக்கியுள்ள பிரதர், புதுமுக இயக்குநர் இயக்கும் ஜீனி உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் கமல் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் ‘தக் லைஃப்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Advertisment

இதனிடையே கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ‘காதலிக்க நேரமில்லை’ என்ற தலைப்பில் உருவாகும் படத்தில்நடித்து வருகிறார். ‘காதலிக்க நேரமில்லை’ எனும் இதே தலைப்பில் 1964ஆம் ஆண்டு ஸ்ரீதர் இயக்கத்தில் ரவிச்சந்திரன், காஞ்சனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. ரெட் ஜெயன்ட் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். மேலும் யோகி பாபு, வினய், லால், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது.

Advertisment

போஸ்டரில், நித்யா மேனன் பெயர் முதலில் இடம்பெற்றது. அதன் பிறகுதான் ஜெயம் ரவி பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது இப்படத்தில் நித்யா மேனன், கிருத்திகா உதயநிதி உள்ளிட்ட பெண் கலைஞர்கள் அதிக பேர் வேலை பார்ப்பதால், அவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் ஜெயம் ரவி இந்த முடிவு எடுத்ததாக படக்குழு தரப்பில்தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இப்படத்தின் முதல் பாடல் குறித்தஅப்டேட் வெளியாகியுள்ளது. ஸ்ருதிஹாசன் இப்பாடலைப் பாட சினேகன் வரிகள் எழுதியுள்ளார்.

ar rahman shruthi hassan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe