/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/486_14.jpg)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் ‘கூலி’. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் டைட்டில் டீசர் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் ரஜினிகாந்த் லுக் டெஸ்ட் செய்த புகைப்படத்தை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து இப்படத்தில் சத்யராஜ் நடித்து வருவதாக கூறியிருந்தார். பின்பு ஸ்ருதிஹாசன் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதனிடையே இப்படத்தில் உபேந்திரா இணைந்துள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இப்படத்திலிருந்து தொடர்ந்து கதாபாத்திர அறிமுக போஸ்டரை படக்குழு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் மலையாள நடிகர் சௌபின் சாஹிர் இப்படத்தில் தயாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் தெலுங்கு முன்னணி நடிகர் நாகர்ஜுனா இப்படத்தில் சைமன் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் இப்படத்தின் இணைந்த அடுத்த பிரபலம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, ஸ்ருதிஹாசன் இப்படத்தில் இணைந்துள்ளதாகவும் பிரீத்தி என்ற கதாபாத்திரத்தில் அவர் நடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக ரஜினிகாந்த் படத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கிறார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/485_17.jpg)
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் கவனம் செலுத்தி வரும் ஸ்ருதிஹாசன், கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியான பிரபாஸின் சலார் படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை அடுத்து, 'தி ஐ' (The Eye), ஹாலிவுட் படத்தை கைவசம் வைத்துள்ளார். மேலும் இவரது இசையில் கடந்த மார்ச் மாதத்தில் வெளியான இனிமேல் ஆல்பத்தில் ஸ்ருதிஹாசனும் லோகேஷ் கனகராஜும் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)