Advertisment

விஜய் பட ரீமேக்கில் ஸ்ருதிஹாசன்...

இயக்குனர் அட்லி ராஜா ராணி படத்தை தொடர்ந்து விஜய்யை வைத்து முதன் முதலாக இயக்கிய படம் தெறி. இந்த படம் கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி வெளியானது. வி கிரியேன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ். தாணு ரூ.75 கோடிக்கு இப்படத்தை தயாரித்தார். சுமார் 175 கோடி வரையில் வசூல் சாதனை செய்தது. இதனால்தான் அட்லிக்கு அடுத்தடுத்த வாய்ப்பை விஜய் கொடுத்தார் என்றுகூட சொல்லலாம்.

Advertisment

shruthi hassan

ஜி.வி. பிரகாஷ் இசையில் வெளியான ஐம்பதாவது படம் தெறி. இந்தப் படத்தின் மிகப்பெரிய வெற்றியால், ‘மெர்சல்’, ‘பிகில்’ என அடுத்தடுத்து அட்லி இயக்கத்தில் நடித்தார் விஜய். இந்தப் படம் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு அப்போதே வெளியாகியிருந்தாலும் தெலுங்கில் இந்தப் படத்தை ரீமேக் செய்ய ஏகப்பட்ட போட்டி நிலவியது.

விஜய் கதாபாத்திரத்தில் ரவி தேஜா நடிக்கிறார் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது அது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் ரீமேக் செய்யப்படும் தெறி படத்தில் விஜய் கதாபாத்திரத்தில் ரவி தேஜா நடிக்கிறார். மேலும் அதில் ஆசிரியராக நடித்திருக்கும் எமி ஜாக்சன் கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹாசன் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

actor vijay shruthi hassan
இதையும் படியுங்கள்
Subscribe