
'கே.ஜி.எஃப்' படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து இப்பட இயக்குனர் பிரஷாந்த் நீல் அடுத்ததாக 'கே.ஜி.எஃப் 2' படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் வரும் ஜூலை மாதம் வெளியாகவுள்ள நிலையில் பிரஷாந்த நீல் அடுத்ததாக 'பாகுபலி' புகழ் பிரபாஸ் நாயகனாக நடிக்கும் 'சலார்' படத்தை இயக்கி வருகிறார். கடந்த ஜனவரி மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது கரோனா காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்கிறார். இந்நிலையில் ஸ்ருதிஹாசன் நடிக்கும் கதாபாத்திரம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி ஸ்ருதிஹாசன் இப்படத்தில் அரசியல் நிருபராக நடிப்பதாகக் கூறப்படுகிறது. தெலுங்கு, கன்னடத்தில் தயாராகும் 'சலார்' திரைப்படம், தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒரே நேரத்தில் வெளியிடப்பட உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)