shruthi haasan make his debut in hollywood as actress

தமிழ், தெலுங்கு, கன்னடம் இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். அந்த வகையில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் 'சலார்' படத்திலும், நடிகர் பாலமுரளி கிருஷ்ணா நடிப்பில் தயாராகி வரும் 'என்பிகே 107' எனும் படத்திலும், சிரஞ்சீவிக்கு ஜோடியாக 'சிரு 154' எனும் படத்திலும் நடித்து வருகிறார்.

Advertisment

இந்நிலையில் ஸ்ருதிஹாசன் ஹாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளார்.டாப்னே ஷ்மோன் என்ற பெண் இயக்குநர் இயக்கும் 'தி ஐ' (The Eye) படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மார்க் ரவுலி கதாநாயகனாக நடிக்கும் இப்படம் சைக்கோ திரில்லர் ஜானரில் உருவாகவுள்ளது. இப்படத்திற்கான படப்பிடிப்பை இந்த மாத இறுதியில் கிரீஸ் நாட்டில் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisment

இது தொடர்பாக ஸ்ருதிஹாசன், " இது ஒரு ஸ்பெஷலான படம்.இதில் ஒரு பகுதியாக இருப்பது பெரும் மகிழ்ச்சி " என தெரிவித்துள்ளார். இதனிடையே ஹாலிவுட்டில்பிரபல நிறுவனமான டிசி தயாரிக்கும் 'தி சான்ட்மேன்: ஆக்ட் III' ஆடியோ நாடகத்தில் குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.