தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். அந்த வகையில் இப்போது ரஜினி - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் கூலி படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ட்ரெயின்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படங்களைத் தவிர்த்து 'தி ஐ' (The Eye) என்ற ஹாலிவுட் படத்தை கைவசம் வைத்துள்ளார்.
இதில் கூலி படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகிறது.
இந்த நிலையில் ஸ்ருதிஹாசன் திருமணம் மற்றும் குழந்தைகள் குறித்து மனம் திறந்துள்ளார். சமீபத்திய பேட்டியில் இது குறித்து பேசிய அவர், “திருமணம் என்ற ஐடியாவே எனக்கு பயமாக இருக்கிறது. அதற்காக போடப்படும் ஒப்பந்த காகிதம் என்னை மிகவும் பயமுறுத்துகிறது. நான் நானாக இருக்க வாழ்க்கை முழுவதும் ரொம்ப கஷ்டப்பட்டுள்ளேன். ஆனால் கமிட்மெண்டில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அதே போல் தாயாகும் விருப்பம் எனக்கு எப்போதும் உண்டு. அதற்காக சிங்கிள் மதராக இருக்க விரும்பவில்லை. ஏனென்றால் ஒரு குழந்தைக்கு அப்பா, அம்மா இரண்டு பேரும் முக்கியம். அப்படி இருந்தால் சிறப்பாக இருக்கும். அதே சமயம் சிங்கிள் மதராக இருப்பவர்களை நான் அவமானப்படுத்தவில்லை. குழந்தைகளை தத்தெடுப்பது பற்றி வேண்டுமானால் சிந்திப்பேன். ” என்றார்.
முன்னதாக ஸ்ருதிஹாசன் லண்டனைச் சேர்ந்த நடிகர் மைக்கேல் கார்சலேவுடன் காதலில் இருந்தார். பின்பு 2019ல் இருவரும் பிரிந்தனர். இதையடுத்து 2020ல் டூடுல் கலைஞரான சாந்தனு ஹசாரிகாவுடன் காதலில் இருந்து பின்பு கடந்த ஆண்டு பிரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.