Skip to main content

கரோனா அறிகுறியுடன் ஸ்ரேயா கணவர்!! வீட்டிலேயே சிகிச்சை! 

Published on 15/04/2020 | Edited on 15/04/2020

உலகம் முழுவதும் கரோனா வைரஸால், சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.25 லட்சத்தை கடந்துள்ளது. மேலும், 4,91,000 பேர் இந்த வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். அதேபோல் இந்தியாவிலும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே வரும் நிலையில், கரோனா அறிகுறியுடன் சிகிச்சைக்கு சென்ற ஸ்ரேயாவின் கணவருக்கு ஸ்பெயினில் உள்ள ஒரு மருத்துவமனை சிகிச்சையளிக்க மறுத்து திருப்பி அனுப்பிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

dgb

 

கடந்த 2018ஆம் ஆண்டு நடிகை ஸ்ரேயாவிற்கும், ஆண்ட்ரே கொஸ்சீவுக்கும் திருமணம் நடந்தது. இருவரும் தற்போது ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவில் வசித்து வரும் நிலையில், தனது கணவருக்கு கரோனா வைரஸ் அறிகுறி இருப்பதை அறிந்த ஸ்ரேயா அவரை அருகிலுள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் அங்குள்ள மருத்துவர்கள் ஆண்ட்ரேவுக்கு கரோனா இல்லையென்றாலும், இங்கு தங்கியிருந்தால் கரோனா தொற்று ஏற்பட்டுவிடும் என்று அறிவுறுத்தியதால் ஸ்ரேயா தனது கணவரை அங்கிருந்து அழைத்துச் சென்றுள்ளார். இந்நிலையில் தற்போது இருவரும் சுயதனிமைப்படுத்தலை கடைபிடித்து, வீட்டிலேயே இருந்து சிகிச்சை எடுத்துக் கொண்டு வருவதால் ஆண்ட்ரே கொஸ்சீவ் கரோனா அறிகுறிகளில் இருந்து குணமடைந்து வருவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரேயா - நித்யா மேனன் இணையும் அந்தாலஜியின் ட்ரைலர் வெளியீடு

Published on 11/11/2020 | Edited on 11/11/2020
shriya

 

 

ஸ்ரேயா சரண்  மற்றும் நித்யா மேனன் ஆகியோர்  நடிக்கும் அந்தாலஜி,  'கமனம்'. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் தயாராகி வரும் இந்த அந்தாலஜிக்கு  இளையராஜா இசையமைக்கிறார்.  

 

அறிமுக இயக்குனர் சுஜனா ராவ் இயக்கும் 'கமனம்'  அந்தாலஜியின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து, விரைவில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் , இந்த அந்தாலஜியின் ட்ரைலர் வெளியாகிவுள்ளது. இப்படத்தின் ஒவ்வொரு மொழி ட்ரைலரையும், அந்த மொழியின் பிரபல நடிகர்கள் வெளியிட்டுள்ளனர்.  

 

தமிழில் ஜெயம் ரவி, மலையாளத்தில் பகத் பாசில், கன்னடத்தில் சிவ ராஜ்குமார், தெலுங்கில் பவன் கல்யாண் , ஹிந்தியில் சோனு சூட் ஆகியோர் கமனம் அந்தாலஜியின் ட்ரைலரை வெளியிட்டுள்ளனர்.

 

 

Next Story

இளையராஜா இசையில் ஸ்ரேயா நடிக்கும் புது படம்! 

Published on 11/09/2020 | Edited on 11/09/2020

 

shriya saran


தமிழில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் ஸ்ரேயாசரண். ரஜினியுடன் 'சிவாஜி', விக்ரமுடன் 'கந்தசாமி', விஜய்யுடன் 'அழகிய தமிழ் மகன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது இந்தி, தெலுங்கு, மலையாளம் படங்களிலும் நடித்துள்ளார். 

 

கடந்த சில வருடமாகவே சினிமாவிலிருந்து ஒதுங்கியுள்ள ஸ்ரேயா, 2018ஆம் ஆண்டு ரஷ்ய தொழிலதிபர் ஆண்ட்ரி கோஸ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 

 

திருமணத்துக்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்ட ஸ்ரேயா, தற்போது மீண்டும் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இவர் கைவசம் விமலின் 'சண்டக்காரி', அரவிந்த்சாமியின் 'நரகாசூரன்' போன்ற படங்கள் உள்ளன. மேலும், ராஜமௌலி இயக்கும் ஆர்.ஆர்.ஆர் படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியானது. 

 

இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஸ்ரேயாவிற்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் எனப் பலரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அவர் நடிக்கும் ‘கமனம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். சுஜன் ராவ் இயக்கும் இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் தயாராக உள்ளது.