Skip to main content

தனுஷின் பிளாக்பஸ்டர் படத்தில் நடிக்கும் ஸ்ரேயா 

Published on 11/11/2019 | Edited on 11/11/2019

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் உருவான 'அசுரன்' படம் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது. தனுஷுடன் மஞ்சு வாரியார், பிரகாஷ்ராஜ், பசுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து பிரமிக்கவைத்தது.

 

Shriya

 

 

மேலும் படத்தை பார்த்த பல்வேறு திரை பிரபலங்கள் பாராட்டி வரும் நிலையில் 'அசுரன்' படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் தனுஷ் கதாபாத்திரத்தில் வெங்கடேஷ் நடிக்கிறார். மஞ்சுவாரியர் கதாபாத்திரத்தில் நடிக்க கதாநாயகி தேர்வு நடந்து வரும் நிலையில் நடிகை ஸ்ரேயா நாயகியாக நடிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருமணத்திற்கு பிறகு சினிமாவிலிருந்து சற்று ஒதுங்கி இருந்த ஸ்ரேயா இப்படம் மூலம் மீண்டும் சினிமாவிற்குள் ரீஎண்ட்ரி கொடுக்கிறார். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் தனுஷுக்கு விருது

Published on 29/11/2021 | Edited on 29/11/2021

 

Actor Dhanush won Best Actor award BRICS Film Festival for asuran movie

 

சிறந்த படைப்புகள், கலைஞர்கள் என திரைத்துறையில் சாதித்தவர்களை அங்கீகரிக்கும் விதமாக ஆண்டுதோறும் இந்தியாவில் சர்வதேச திரைப்பட விழா நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான 52வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் கடந்த  20ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் (28.11.2021) நிறைவடைந்தது. இவ்விழாவில் பல்வேறு மொழி திரைப்படங்கள் மற்றும் குறும்படங்கள் திரையிடப்பட்ட நிலையில், தமிழில் இருந்து பி.எஸ். வினோத்ராஜ் இயக்கிய ‘கூழாங்கல்’ திரைப்படமும் ஜெயச்சந்திர ஹாஷ்மி இயக்கிய ‘ஸ்வீட் பிரியாணி’ குறும்படமும் திரையிடப்பட்டன.

 

இதையடுத்து, 52வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவுடன் நடத்தப்பட்ட BRICS திரைப்பட விழாவில் ‘அசுரன்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருது தனுஷுக்கு வழங்கப்பட்டுள்ளது. வெற்றி மாறன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியான இப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டு பல்வேறு விருதுகளை வென்றுள்ளது. மேலும், 2019ஆம் ஆண்டின் சிறந்த படத்திற்கான தேசிய விருது 'அசுரன்' படத்திற்கும், அதில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது தனுஷுக்கும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

 

 

 

Next Story

அசுரன் தெலுங்கு ரீமேக்கின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Published on 12/07/2021 | Edited on 12/07/2021

 

asuran

 

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், பசுபதி, கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான படம் 'அசுரன்'. தமிழில் இப்படத்திற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, இப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது. தெலுங்கு ரீமேக்கை சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் தாணு இருவரும் இணைந்து தயாரித்தனர். தமிழில் தனுஷ் நடித்த கதாபாத்திரத்தில் வெங்கடேஷ் நடிக்க, மஞ்சுவாரியார் கதாபாத்திரத்தில் ப்ரியாமணி நடித்தார். இப்படத்திற்கு தெலுங்கில் 'நாராப்பா' எனப் பெயரிடப்பட்டது.

 

இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து ரிலீஸிற்கு தயாரான வேளையில், கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் படத்தை திட்டமிட்டபடி ரிலீஸ் செய்வதில் சிக்கல் எழுந்தது. இந்த நிலையில், 'நாராப்பா' படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட முடிவெடுத்த தயாரிப்பு தரப்பு, சில முன்னணி ஓடிடி நிறுவனங்களிடம் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியது. இதில், அமேசான் நிறுவனத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எட்டப்பட்டது. இதனையடுத்து, நாராப்பா படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை அமேசான் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி, நாராப்பா திரைப்படம் அமேசான் தளத்தில் வரும் ஜூலை 20ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

 

அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக்கான நாராப்பா ரிலீஸ் தெலுங்கு ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.