Shreya Ghoshal concert couple gets engaged

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பாடல்கள் பாடி இந்திய அளவில் பிரபலமானவர் ஸ்ரேயா கோஷல். திரைப்படங்களில் பாடுவதை தாண்டி இசை கச்சேரியையும் நடத்தி வருகிறார். இப்போது ‘ஸ்ரேயா கோஷல் லைவ், ஆல் ஹார்ட்ஸ் டூர்’ என்ற தலைப்பில் பல்வேறு இடங்களில் நடத்தி வருகிறார்.

Advertisment

அந்த வகையில் கொல்கத்தாவில் கடந்த மாதம் 10ஆம் தேதி நடக்கவிருந்த இசைக்கச்சேரி கடந்த 19ஆம் தேதி நடத்தினார். இதில் ரசிகர்கள் மத்தியில் உற்சாகமாக பாடி வந்த ஸ்ரேயா கோஷல், கூட்டத்தில் ரசிகர் ஒருவர் வைத்திருந்த பதாகையை பார்த்து சற்று அதிர்ச்சியடைந்தார். அந்த ரசிகர், “ஸ்ரேயா, நீங்கள் தான் என்னுடைய இரண்டாவது காதல்” என பதாகையில் குறிப்பிட்டிருந்தார். உடனே அந்த ரசிகரிடம், “அப்போது முதல் காதல் யார்” என கேட்க, அந்த ரசிகர் தனது அருகில் அமர்ந்திருந்த காதலியை காண்பித்து, அனைவரின் முன்பாக அவரிடம் கல்யாணத்துக்கு ப்ரொபோஸ் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

Advertisment

பின்பு தனது காதலிக்கு மோதிரத்தை அணிவித்தார். இதையடுத்து ஸ்ரேயா கோஷல் அந்த ரசிகரை கலாய்த்தார். மேலும் அவருக்காக பாட்டும் பாடினார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.