சினிமாத்துறையில் இருக்கும் நடிகர்கள், நடிகைகள் வேறு எதாவது ஒரு தொழில் செய்வது உண்டு. நயன்தாரா, திரிஷா, அனுஷ்கா, காஜல் அகர்வால் ஆகியோர் ரியல் எஸ்டேட் தொழில் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுபோல ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்ற தொழில் செய்பவர்களாகவே இருக்கின்றனர்.

Advertisment

shradha srinath

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இந்நிலையில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் புதிதாக ஹோட்டல் ஒன்றை தொடங்கி தொழிலதிபர் லிஸ்ட்டில் சேந்திருக்கிறார். கன்னட சினிமாவில் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் பிரபலமடைந்துள்ள நடிகையான ஷ்ரத்தா தற்போது விஷாலுடன் சக்ரா படத்தில் நடித்து வருகிறார்.

Advertisment

வேளச்சேரியில் உள்ள பினீக்ஸ் மாலில் ஹோட்டல் திறந்துள்ளார் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர் “எனது ஓட்டல் சிறியதாக இருந்தாலும் கண்டிப்பாக நல்ல உணவு இங்கே கிடைக்கும்” என்று கூறியுள்ளார்.