shradha srinath

Advertisment

தமிழ், தெலுங்கு, கன்னட திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். நடிகர் அஜித்துடன் இணைந்து 'நேர்கொண்ட பார்வை' படத்தில் நடித்திருந்தார். தற்போது விஷாலுடன் 'சக்ரா' படத்தில் நடித்துள்ளார்.

மே 28ஆம் தேதி மாதவிடாய் சுகாதார தினம் கொண்டாடப்பட்டது. இது தொடர்பாக பல பெண்கள் தங்களின் கருத்துகளைப் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் இதுகுறித்து நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

அதில்,"அப்போது எனக்கு 14 வயது. குடும்ப பூஜை ஒன்றில், எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது. என் அம்மா அப்போது என்னுடன் இல்லை எனவே என் அருகில் அமர்ந்திருந்த என் அத்தையிடம் அதைப் பற்றி கவலையுடன் தெரிவித்தேன். ஏனெனில் நான் சானிட்டரி நாப்கின் எடுத்து வரவில்லை. என்னருகில் அமர்ந்திருந்த நல்ல குணம் கொண்ட பெண்மணி ஒருவர் நான் கவலையோடு இருப்பதைக் கண்டும், நான் பேசுவதை ஒட்டுக்கேட்டுவிட்டு என்னிடம் வந்து 'கவலைப்படாதே குழந்தாய், கடவுள் உன்னை (மாதவிடாய் காலத்தில் பூஜையில் கலந்து கொண்டதற்காக) மன்னிப்பார்' என்றார். அன்றிலிருந்து நான் ஒரு பெண்ணியவாதியாகவும் கடவுள் மறுப்பாளராகவும் ஆகிவிட்டேன்.."என்றுதெரிவித்துள்ளார்.