2016ஆம் வெளியான 'இறுதிச்சுற்று' படம் மூலம் தனது இரண்டாவது ரவுண்டில் வெற்றிகரமாக வலம் வர தொடங்கிய நடிகர் மாதவனுக்கு அடுத்ததாக வெளியான 'விக்ரம் வேதா' படமும் நல்ல பெயரை வாங்கி தந்தது. இப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்திருந்தார். இவர்களின் கெமிஸ்ட்ரி இப்படத்தில் அதிகம் பேசப்பட்ட நிலையில் தற்போது இந்த ஜோடி மீண்டும் ஒரு புதிய படத்தில் ஜோடி சேர உள்ளது. மாதவன் அடுத்ததாக ‘மாறா’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். அறிமுக இயக்குனர் திலிப் குமார் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் 18ஆம் தேதி தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.