போஸ்ட் அபோகாலிப்டிக் ஜானரில் உருவாகும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் 'கலியுகம்'

shraddha srinath starring kaliyugam update out now

விஜய் சேதுபதியின் 'விக்ரம் வேதா', அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்,தற்போது ப்ரோமோத் சுந்தர் இயக்கும் கலியுகம் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் கிஷோர் நடிக்கிறார். இப்படத்தை ஆர்.கே இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக ப்ரைம் சினிமாஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கே.எஸ். ராமகிருஷ்ணா பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார். புதுமையான கதைக்களம் கொண்ட இந்தப் படத்தில் முழுக்க புதுமுகங்களேபணிபுரிந்துள்ளனர்.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="7da0e946-60aa-4ff9-9282-c39d2cb3f5fc" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/velan-article-inside.jpg" />

'கலியுகம்' திரைப்படம் போஸ்ட் அபோகாலிப்டிக் எனப்படும் இறுதி பேரழிவிற்கு பின்னரான த்ரில்லர் ஜானரில் எடுக்கப்பட்டு வருகிறது . முதல் மற்றும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை முடித்துள்ள படக்குழு இறுதிக்கட்ட படப்பிடிப்பைதற்போது தொடங்கியுள்ளது. விரைவில் படப்பிடிப்பை முடித்துரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.

kaliyugam
இதையும் படியுங்கள்
Subscribe