யூ டர்ன் கன்னட படம் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்து, பின் தமிழில் இவன் தந்திரன் படம் மூலம் அறிமுகமாகி பின்னர் விக்ரம் வேதா படத்தின் மூலம் பிரபலமடைந்தார் கர்நாடகாவை சேர்ந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத். இவர் தற்போது மிலின் டாக்கீஸ் என்ற ஹிந்தி படத்தில் கல்லூரி மாணவி வேடத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் தான் நடிக்கும் ஹிந்தி படத்தின் நடிப்பை பற்றி ஷ்ரத்தா ஸ்ரீநாத் பேசுகையில்...."நிறைய வித்தியாசங்கள் உள்ளன. பாலிவுட்டில் இருப்பவர்கள் அதிக ஒழுக்கமாகவும், திறமையானவர்களாகவும் இருக்கிறார்கள். எனது தந்தை ராணுவத்தில் பணிபுரிந்தார். இதனால் வட மாநிலத்தில் இருந்ததால் இந்தி நன்றாக பேசுவேன். இதனால் எனக்கு மொழி பிரச்சினை இல்லை" என்றார்.