சீனாவின் வுஹான் மாகாணத்தில் பிறந்து உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் பலி எண்ணிக்கை 47500 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்கியுள்ளது. வுஹான் மாகாணத்தில் உள்ள சந்தையில் உணவுக்காக பாம்பு, நாய், எலி, தேள், கரப்பான் பூச்சி, வவ்வால், முதலைகள், எறும்புத் தின்னி, ஒட்டகம் உள்ளிட்ட 122 விலங்குகளின் இறைச்சிகள் உணவுக்காக விற்கப்படுகின்றன.

இந்த இறைச்சி சந்தையில் ஏதோ ஒரு விலங்கில் இருந்துதான் கரோனா வைரஸ் மனிதர்களுக்கு தொற்றியதாகக் கூறப்படும் நிலையில் தற்போது சீனாவில் வைரஸ் தொற்று குறைந்து இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது. அங்குள்ள சந்தைகளில் மீண்டும் இதே விலங்குகளை விற்கவும்,வாங்கவும் தொடங்கி உள்ள நிலையில் நடிகை ஸ்ரத்தா தாஸ் சீனர்களைக் கடுமையாகச் சாடி சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...''கரோனா வைரஸ் பரவலுக்குப் பிறகும் இப்படி வவ்வால், எலி, நாய்கள், கரப்பான் பூச்சி, முயல், தேள் இதையெல்லாம் திண்கிறீர்களே உங்களுக்குப் புத்தி இல்லையா..?” என்று கண்டித்து இறைச்சி புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.