ADVERTISEMENT

தேர்தலை முன்னிட்டு திரையரங்குகளில் காட்சிகள் ரத்து!

05:43 PM Apr 16, 2024 | kavidhasan@nak…

18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் ஈடுப்பட்டு தங்களது வேட்பாளர்களுடன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், வி.சி.க உள்ளிட்ட சில கட்சிகள் இந்தியா கூட்டணியிலும் பா.ஜ.க, பா.ம.க, த.மா.கா உள்ளிட்ட சில கட்சிகள் என்.டி.ஏ கூட்டணியிலும் அ.தி.மு.க, தே.மு.தி.க தனிக்கூட்டணியிலும் நாம் தமிழர் கட்சி தனித்தும், தேர்தலில் களம் காண்கின்றனர். இந்த நிலையில் தேர்தல் நடைபெறும் நாளான ஏப்ரல் 19ஆம் தேதி திரையரங்க உழியர்களுக்கு விடுமுறை அறிவித்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டிருந்தது. தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியபடி, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்த நிலையில் ஏப்ரல் 19, வாக்குப் பதிவு நாளன்று திரையரங்குகளில் காலை மற்றும் மதிய காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதே சமயம் அதே நாளில் மாலை மற்றும் இரவு காட்சிகள் வழக்கம் போல் திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்காளர்கள் முழு அளவில் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT