Published on 01/04/2023 | Edited on 01/04/2023

அறிமுக இயக்குநர்கள் பி.கே.விஜய் மற்றும் கிரிதர் ராமகணேஷ் இயக்கத்தில் தயாராகும் முதல் இணையத் தொடர் 'மை டியர் டயானா'. இதில் நடிகர் மணிகண்ட ராஜேஷ், நடிகை மகாலட்சுமி, ஜனா குமார், மகேஷ் சுப்பிரமணியம், அக்சயா பிரேம்நாத், துரோஷினி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்த இணையத் தொடருக்கு குஹா கணேஷ் இசையமைக்க வோர்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ரொமான்டிக் திரில்லர் ஜானரில் இந்த தொடர் உருவாகிறது.
பிக் பாஸ் பிரபலமும் நடிகருமான மணிகண்ட ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் முதல் இணையத் தொடர் இத்தொடர். இதன் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.