பா.ரஞ்சித், ஷாந்தனு, அசோக்செல்வன் படத்தின் அப்டேட்

shoot wrapped for shanthnu, ashok selvan, ranjith project

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வரும் பா.ரஞ்சித் 'நீலம் புரொடக்சன்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் பல படங்களை தயாரித்து வரும் நிலையில்கிரிக்கெட் விளையாட்டைமையமாகக் கொண்டு இயக்குநர்ஜெய்குமார் என்பவர் இயக்கத்தில் ஒரு படத்தை தயாரித்து வருகிறது.

இப்படத்தில்ஷாந்தனு, அசோக்செல்வன்,கீர்த்தி பாண்டியன்,யோகிபாபுஉள்ளிட்ட பலர் நடிக்ககோவிந்த் வசந்தா இசை பணிகளை மேற்கொள்கிறார். இப்படத்தின்இறுதிக்கட்ட படப்பிடிப்புஅரக்கோணம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில்முழு வீச்சில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் நிறைவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதனைபடக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் படக்குழுவினர் பகிர்ந்து நன்றியை தெரிவித்துள்ளனர்.

Ashok Selvan pa.ranjith shanthanu
இதையும் படியுங்கள்
Subscribe