style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி உள்ளிட்டோர் நடித்து வரும் 'சர்கார்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் தற்போது அமெரிக்காவிலுள்ள லாஸ்வேகாஸ் நகருக்கு சென்றுள்ளனர். இதில் கலந்துக் கொள்வதற்காக நடிகை வரலட்சுமியும் அமெரிக்கா சென்றுள்ளார். மேலும் அங்கு நடக்கவிருக்கும் 'சர்கார்' படத்தின் அறிமுக பாடலுக்கு நடனம் அமைக்க ஷோபி மாஸ்டரும் உடன் சென்றுள்ளார். மிகவும் பிரமாண்டமான முறையில் இப்பாடல் உருவாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவான 'கத்தி' படத்தின் அறிமுக பாடலுக்கு ஷோபி மாஸ்டர் தான் நடனம் அமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
style="display:inline-block;" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9546799378">