/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/93_35.jpg)
விஜய் தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க முக்கியக் கதாபாத்திரங்களில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, சம்யுக்தா, ஷாம், யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தில்ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற பொங்கலுக்கு திரையரங்கில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், விஜய்யின் தாயார் ஷோபா, காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் மேற்கொண்டார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "எல்லாரும் நல்லாருக்கணும். எல்லாரும் விஜய் படம் நல்லா ஓடணும்னு வேண்டிக்கோங்க" என்றார்.
பின்பு விஜய்யின் அரசியல் வருகை குறித்தகேள்விக்கு, "எனக்கு அதைப்பற்றி ஒண்ணுமே தெரியாது. அவர் என்ன முடிவெடுக்கிறாரோ அதுதான். கடவுள் என்ன நினைக்கிறாரோ அதான். எனக்கும் என் கணவர் சந்திரசேகருக்கும் இது குறித்து எதுவுமே தெரியாது" எனப் பதிலளித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)