Shivarajkumar's opinion There is no need for politics to help
கன்னடத்தில், சிவராஜ்குமார், உபேந்திரா மற்றும் இராஜ் பி ஷெட்டி நடிப்பில், அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘45’. சுரஜ் புரொடக்ஷன்ஸ் பேனரில் உமா ரமேஷ் ரெட்டி மற்றும் எம். ரமேஷ் ரெட்டி ஆகியோர் தயாரித்துள்ள இந்த படம், வருகிற 25ஆம் தேதி வெளியாகவுள்ளது.
கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் ரிலீஸை ஒட்டி, படக்குழுவினர் புரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், சென்னையில் நேற்று படக்குழு சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் பத்திரிகையாளர் ஒருவர், ‘தமிழ்நாட்டில் ஒரு நடிகர் பெரியளவில் வளர்ந்துவிட்டால் அரசியலுக்கு போகிறார்கள். விஜயகாந்த், சரத்குமார், விஜய் என எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே அரசியலுக்கு போகிறார்கள். கர்நாடகாவில், உபேந்திரா, ராஜ்குமார், நீங்கள் (சிவராஜ்குமார்) உள்பட யாருமே ஏன் அரசியலுக்கு செல்வதில்லை’ என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த சிவராஜ்குமார், “முதலில், அரசியல் எனக்கு தெரியாது. மக்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்றால் கண்டிப்பாக செய்வோம். அதற்கு அதிகாரம் தேவை இல்லை. நான் யாருக்கு வேண்டுமேனாலும் உதவி செய்ய முடியும், அதில் பாரபட்சம் கிடையாது. ஆனால், அரசியலில் சில நேரத்தில் அது முடியாது. சிலரால் மட்டுமே அது முடியும், எல்லாரோலும் முடியாது. நாங்கள் யாருக்கு வேண்டுமேனாலும் உதவி செய்ய முடியும். யாரைப் பற்றியும் கவலைப்பட தேவையில்லை, ஏனென்றால் இது என்னுடைய பணம்” என்று கூறினார்.
Follow Us