shivarajkumar meets kamal in his ghost movie promotion

Advertisment

ஜெயிலர் படம் மூலம் தமிழ் ரசிகர்களிடம் வரவேற்பைப்பெற்றவர் கன்னட முன்னணி ஹீரோவான சிவராஜ் குமார். மேலும் தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற டிசம்பர் 15 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது.

இந்த நிலையில், கன்னடத்தில் அவர் புதிதாக நடித்துள்ள திரைப்படம் 'கோஸ்ட்'. இப்படத்தில் அனுபம் கேர், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தேஷ் தயாரித்துள்ள இப்படத்தை ஸ்ரீனி இயக்கியுள்ளார். அர்ஜுன் ஜன்யா இசையமைதுள்ளார். இப்படம் வருகிற 19 ஆம் தேதி வெளியாகிறது. இதனால் அதன் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது.

அது வகையில், மும்பையில் இப்படத்தினை ப்ரோமோஷன் செய்ய அங்கு சென்றிருக்கும் சிவராஜ் குமார், கமலை சந்தித்துள்ளதாகத்தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் பகிர்ந்து, அவரது விக்ரம் பட பாடலில் வரும் வரிகளை இணைத்துள்ளார். கமல்ஹாசன் அவரது மகளான அக்‌ஷரா ஹாசன் பிறந்தநாளைக் கொண்டாட மும்பை சென்றிருந்தார். நேற்று அக்‌ஷரா ஹாசன் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.