shivarajkumar to joined in vijay 69th movie

கன்னட முன்னணி நடிகரான சிவ ராஜ்குமார், தமிழில் ரஜினியின் ஜெயிலர் படம் மூலம் அறிமுகமாகியிருந்தார். இதன் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் பிரபலமானார். இதையடுத்து தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இப்போது ‘பாய்ரதி ரணகல்’ என்ற கன்னடப் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற 15ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனால் புரொமோஷன் பணிகளில் பிஸியாக இருக்கிறார். அந்த வகையில் ஒரு பேட்டியில், தமிழில் விஜய்யின் 69வது படத்தில் நானும் இருப்பேன் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “விஜய்யின் 69வது படத்தில் ஒரு அழகான கதாபாத்திரத்தில் நடிக்க அழைத்திருந்தனர். ஆனால் என்னுடைய கால்ஷீட் சரியாக அமையுமா எனத் தெரியவில்லை.

இந்தப் படம் விஜய்யின் கடைசி படம் என சொல்கிறார்கள். ஆனால் தனிப்பட்ட முறையில் அவர் நடிப்பை விட்டு விலகக்கூடாது என நினைக்கிறேன். ஒரு நண்பராகவும் நலம் விரும்பியாகவும் சொல்கிறேன் விஜய் ஒரு அற்புதமான நடிகர் மற்றும் நல்ல மனிதர். அவரது லட்சியம் அற்புதமானது, அதை நான் மதிக்கிறேன். அவருடைய படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பேன் என்று நம்புகிறேன்” என்றார்.

Advertisment

முழு நேர அரசியலுக்கு முன் விஜய்யின் கடைசி படமாக பார்க்கப்படும் விஜய்யின் 69வது படம் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் தற்போது இருக்கிறது. அ.வினோத் இயக்கும் இப்படத்தை தெலுங்கு நிறுவனமான கே.வி.என். புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாலிவுட் நடிகர் பாபி தியோல், மலையாள இளம் நடிகை மமிதா பைஜூ, கௌதம் மேனன், பிரியாமணி, நரேன் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படம் அடுத்த ஆண்டு அக்டோபரில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.