shivani narayanan

மிகவும் சிறு வயதிலேயே சின்னத்திரையில் ஹீரோயினாக நடிக்க தொடங்கியவர் ஷிவானி. இவருக்கு தற்போது 19 வயது. சமூக வலைதளத்தில் தினசரி க்ளேமரான புகைப்படங்களை பதிவிட்டு, தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார். இன்ஸ்டாகிராமில் சினிமா பட நடிகைக்கு சமமாக மில்லியனுக்கு மேல் பாலோவர்ஸை வைத்திருக்கிறார்.

Advertisment

அதேபோல பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜே சித்ராவும் மாடலிங் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அவர் பதிவிடும் புகைப்படத்தில் ரசிகர் ஒருவர், க்ளேமருடன் கூடிய புகைப்படங்களை எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்தார். அதற்கு ரிப்ளை செய்த சித்ரா, அதெல்லாம் 2000 பார்ன் என்று பையோவில் போட்டிருப்பவர் இன்ஸ்டாகிராம் பக்கத்துக்கு செல்லுங்கள் என்று பதிவிட்டிருந்தார். இதற்கு பலரும் நீங்கள் ஷிவானியைதானே சொல்கிறீர்கள் என்று கமெண்ட் செய்ய தொடங்கினார்கள். சிலர் இதை மீம்களாகவும் போட்டு கலாய்த்தனர்.

Advertisment

பின்னர் இது சர்ச்சையானது. இதற்கு பதிலளிக்கும் வகையில்,“என்னை உனக்கு பிடிக்கவில்லை என்றாலும் தினமும் என்னை பார்க்கும் நீயும் எனது ரசிகைதான். மற்றவர்கள் பற்றி பேசும் முன் உன் முதுகை பார்” என்று பகிர்ந்தார். இந்த பதிவு நடிகை சித்ராவுக்காகதான், மறைமுக எச்சரிக்கை விடும் தொனியில் போட்டிருக்கிறார் என்று அவருடைய ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.