Advertisment

மிஸ் இந்தியா போட்டியில் இருந்து விலகிய பிரபல தமிழ் நடிகை

Shivani Rajasekhar announces withdrawal from  Miss India 2022

அன்பறிவு படத்தின் மூலம் திரைத்துறையில் கதாநாயகியாக அறிமுகமான ஷிவானி ராஜசேகர் சமீபத்தில் உதயநிதி நடிப்பில் வெளியான நெஞ்சுக்கு நீதி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இவர் கதாபாத்திரம் பலரின் கவனத்தையும் பெற்றது. பிரபல தெலுங்கு நடிகர் ராஜசேகர் மகளான ஷிவானி ராஜசேகர் மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு எம்.பி.பி.எஸ் படித்து வருகிறார்.

Advertisment

ஷிவானி ராஜசேகர் இந்தாண்டிற்கான மிஸ் இந்தியா 2022 போட்டியில் தமிழ்நாடு சார்பாகக் கலந்துகொள்வதாக இருந்த நிலையில் தற்போது அந்த போட்டியிலிருந்து விலகியுள்ளார். இதற்கான காரணத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில், "எனது மருத்துவ படிப்பிற்கான தேர்வுகள் இருப்பதாலும் மலேரியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாலும் அழகு போட்டிக்கான பயிற்சியில் சரிவர ஈடுபட முடியவில்லை. நான் நினைத்தது எதுவும் நடக்கவில்லை. அதனால் இந்த போட்டியிலிருந்து விலகுகிறேன். விரைவில் நலம் பெற்றுத் திரும்பி வருகிறேன். அடுத்தாண்டு கண்டிப்பாக மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொள்வேன்" எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment

Tamil Nadu miss india
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe